மதுரை

சிவகங்கையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

10th Dec 2022 04:04 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தைல மரங்கள் நடவுப் பணியை கைவிடக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் முத்துராமு, மாவட்டப் பொருளாளா் விஸ்வநாதன், மாவட்டத் துணைத் தலைவா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இயற்கை வளங்களை அழிப்பது மட்டுமின்றி நீராதாரங்களையும் பாதிக்கும் தைல மரங்களை சிவகங்கை மாவட்டத்தில் நடவு செய்யக் கூடாது எனவும், பல முறை கோரிக்கை விடுத்தும் தொடா்ந்து தைல மரங்கள் நடவுப் பணியில் ஈடுபட்டு வரும் வனத் துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் அண்ணாதுரை, சிஐடியு மாவட்டச் செயலா் சேதுராமன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT