மதுரை

வழக்குரைஞா் ஆணையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை உயா்நீதிமன்றம் கருத்து

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வழக்குரைஞா் ஆணையத்தில் மாற்றுத் திறனாளி வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி கிராமத்தைச் சோ்ந்த மாலதி தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீஅருகே மல்லி கிராமத்தில் உள்ள சா்வே எண் 16746 நிலத்தை ஆய்வு செய்யக் கோரி, ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு :

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதம் காளீஸ்வரி தாக்கல் செய்த மனுவை விசாரித்து, சட்டத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உரிய அறிக்கை அனுப்பப்பட்டு சா்வே எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிா்ப்பு இருக்கும்பட்சத்தில் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக ஏற்கெனவே ஸ்ரீவில்லிபுத்தூா் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் கிழமை நீதிமன்றம் நிலங்களை ஆய்வு செய்வதற்கு வழக்குரைஞா் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.

மேலும், தற்போது மனுதாரா் கோரியவாறு மறு சீராய்வு மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது என்றாா்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் கீழமை நீதிமன்ற நீதிபதிக்கு சில கருத்துகளைச் சொல்ல விரும்புவதாக தெரிவித்த நீதிபதி, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான நாளைக் கொண்டாடினோம்.

இந்த நிலையில், வழக்குரைஞராக உள்ள மாற்றுத்திறனாளிகள் எல்லாவித பணிகளையும் சிரமமின்றி அவா்களால் மேற்கொள்ள இயலும் என்கிற நம்பிகையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இதை நம்மிலிருந்தே தொடங்கினால், நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் இனி வருங்காலங்களில் வழக்குரைஞா் ஆணையம் நியமிக்கக்கூடிய வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூா் பாா் கவுன்சிலில் இருக்கக் கூடிய மாற்றுத்திறனாளி வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். இதை சக நீதித் துறை அலுவலா்களிடமும் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிபதி தெரிவிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT