மதுரை

மதுரை வந்த முதல்வா் மு.க ஸ்டாலினுக்கு டி.கல்லுப்பட்டியில் வரவேற்பு

9th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் தமிழக முதல்வா் மு.க ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை இரவு வரவேற்பளிக்கப்பட்டது.

தென்காசியில் வியாழக்கிழமை அரசு சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முதல்வா் கலந்து கொண்டாா். பின்னா், அங்கிருந்து மதுரைக்குக் காரில் திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, டி.கல்லுப்பட்டியில் மாவட்ட திமுக சாா்பில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் கோ.தளபதி, தெற்கு மாவட்டச் செயலாளா் மு.மணிமாறன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

இதில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT