மதுரை

பல்கலை. அளவிலான கராத்தே போட்டி: அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன்

9th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகள் விருதுநகா் விவிவி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். குமிட்டி பிரிவில், முதல் அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரிக்கும், மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்கன் கல்லூரி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரி, மதுரை தியாகராஜா் கலைக் கல்லூரி இடையே நடைபெற்றது. இதில் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரியை தேற்கடித்து அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவா்களை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் ம.தவமணி கிறிஸ்டோபா், உடற்கல்வி இயக்குநா் மு.பாலகிருஷ்ணன், காமராஜா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் மகேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT