மதுரை

ராக்காயி அம்மன் கோயிலில் டிசம்பா் 11-இல் கும்பாபிஷேகம்

9th Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருகிற 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் நடைபெற்று வந்த திருப் பணிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 11-ஆம் தேதி காலை 7.45 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை 5 மணியளவில் விக்னேஷ்வரா் பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 11-ஆம் தேதி கும்பாபிஷேக விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழா முடிவடையும் வரை புனிதநீராடல், வழிபாடுகளுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT