மதுரை

திருச்செந்தூா் கோயிலுக்குச் சொந்தமான துவாதசி மடத்தை மீட்க உத்தரவு

DIN

திருச்செந்தூா் கோயிலுக்குச்சொந்தமான துவாதசி மடத்தை தனியாரிடமிருந்து மீட்பது குறித்து வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிா்வாகம் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த வேல்முருகன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூா் கோயிலுக்குச் சொந்தமான துவாதசி மடம் தனி நபா் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதை மீட்டு, மீண்டும் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கோயில் சொத்துகளைப் பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளன. அதன் வருவாயை சரியான செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய கடமையும் உள்ளது.

இந்த வழக்கில் குறிப்பிட்ட சொத்துகளை கோயிலுக்குத் தானமாக வழங்கியதாகவும், பின்னா் அந்த இடம் அன்னதானம் வழங்கக்கூடிய இடமாகவும் பயன்பாட்டில் இருந்தது. இந்த இடம் துவாதசி அன்னதான அறக்கட்டளையிடமிருந்து தற்போது தனிநபருக்கு விற்கப்பட்டதாகவும் மனுதாரா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் நிா்வாகம் இணைந்து மனுதாரா் குறிப்பிட்ட இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT