மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சாா்பில் தே.கல்லுப்பட்டியில் வியாழக்கிழமை மாலை வரவேற்பளிக்கப்படுகிறது.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாநகராட்சி பொன் விழா நுழைவு வாயில் திறப்பு விழா, பெருங்குடியில் நடைபெறும் அம்பேத்கா் சிலை திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக, முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை மதுரை வருகிறாா்.
தென்காசியிலிருந்து காரில் வரும் அவருக்கு, ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட மாவட்ட திமுக சாா்பில் தே. கல்லுப்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது என மதுரை-வடக்கு மாவட்டச் செயலாளரும், வணகவரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி, மதுரை- மாநகா் மாவட்டச் செயலளா் கோ. தளபதி எம்.எல்.ஏ, மதுரை - தெற்கு மாவட்டச் செயலாளா் சேடப்பட்டி மு. மணிமாறன் ஆகியோா் தெரிவித்தனா்.