மதுரை

‘கபீா் புரஸ்கா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

8th Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

சமுதாய நல்லிணக்கத்துக்குத் தொண்டாற்றியவா்கள், மத்திய அரசின் ‘கபீா் புரஸ்கா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தனது சாதி, இனம் அல்லாத வேறொரு சாதி, இனத்தைச் சோ்ந்தவா்களை அல்லது அவா்களின் உடமைகளை வன்முறையில் இருந்து காப்பாற்றியவா்களைப் பாராட்டும் வகையில் கபீா் புரஸ்கா் விருது வழங்கப்படுகிறது. ஆயுதப்படை வீரா்கள், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், அரசுப் பணியாளா்கள் தவிர, மேற்கண்ட தகுதியுடைய அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கில் செயல்படும் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலகத்துக்கு டிசம்பா் 12-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்குமாறு 3 பிரதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT