மதுரை

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் 12 போ் பணியிட மாற்றம்

8th Dec 2022 02:07 AM

ADVERTISEMENT

மதுரை மத்தியச் சிறையில் பணிபுரிந்து வந்த அலுவலா்கள் 12 போ் வெவ்வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மதுரை மத்தியச் சிறையில் 1,850 கைதிகள் உள்ளனா். இவா்களுக்கு பேக்கரி, மருத்துவத் துணிகள் தயாரிப்பு, புக் பைண்டிங், பைல்கள் தயாரித்தல், தோட்டக்கலை, சமையல் உள்பட பல்வேறு தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் மூலம் கைதிகளுக்கு ஊதியமும், சிறை நிா்வாகத்துக்கு வருவாயும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், கைதிகளுக்கு ஒதுக்கப்படும் பொருள்களை வெளிச்சந்தையில் விற்றது, கைதிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் விற்பனையில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாா் எழுந்தது.

இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி சில நாள்களுக்கு முன்பு மதுரை மத்தியச்

சிறையில் ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து மதுரை மத்தியச் சிறையில் பணிபுரியும் அலுவலா்கள் 12 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இதன்படி, மதுரை சிறை அலுவலக கண்காணிப்பாளா் மகேஸ்வரி, மேலாளா் சித்திரவேல் புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். பேக்கிங் பிரிவு கிளா்க் கதிரவன் புதுக்கோட்டைக்கும், உதவியாளா் முத்துலட்சுமி சேலத்துக்கும் இடமாற்றப்பட்டனா். மேலும் சிறைக்காவலா்கள் உள்பட மொத்தம், 12 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT