மதுரை

பாலமேடு அருகே 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருட்டு

8th Dec 2022 02:06 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் 3 ஜல்லிக்கட்டு காளைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றனா்.

பாலமேடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலா் ஜல்லிக்கட்டுக்காளைகள் வளா்த்து வருகின்றனா். இந்த நிலையில், பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டியைச்சோ்ந்த தத்து, ராமசாமி ஆகியோா் வளா்த்து வந்த இரு ஜல்லிக்கட்டுக் காளைகள், பாலமேடு அருகேயுள்ள கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த லட்சுமி வளா்த்து வந்த ஜல்லிக்கட்டுக் காளை ஆகிய 3 காளைகளை அடையாளம் தெரியாத நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச்சென்றனா்.

இதுதொடா்பான புகாா்களின்பேரில், பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காளைகளைத் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT