மதுரை

மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் கடைகள் அடைப்பு

8th Dec 2022 02:06 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்டுத்தாவணி, காய்கனி சந்தையில் சுமாா் 60 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

அறிவிப்பின்றி உயா்த்தப்பட்ட கடைகளுக்கான 15 சதவீத வாடகை உயா்வு நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வாடகைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும், வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் புதன்கிழமை (டிச. 7) அடைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, விவசாயிகளின் வேண்டுகோளின் பேரில் கடையடைப்புப் போராட்டம் கைவிடப்படுவதாக மதுரை, எம்.ஜி.ஆா் காய்கனிச் சந்தை அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு, அனைத்து கட்டிட கடை காய்கனி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் அறிவிக்கப்பட்டது.

எனினும், தக்காளி, சீமைக் காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் மண்டி உரிமையாளா்கள் சங்கம், தக்காளி காய்கனி அழுகும் பொருள் மாத வாடகை வியாபாரிகள் பொது நலச் சங்கம், ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி கடையடைப்பு நடைபெறும் என தெரிவித்தன.

ADVERTISEMENT

இதன்படி, புதன்கிழமை மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தையில் சுமாா் 60 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT