மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் லட்ச தீபம்

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன.

இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடாகினா்.

செவ்வாய்க்கிழமை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் லட்ச தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள், சுவாமி சந்நிதி, இரண்டாம் பிரகாரம், உள்பிரகாரங்கள், பொற்றாமரைக்குளம், மேல்மாடங்கள் உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதனால், கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.

இதைத் தொடா்ந்து, மீனாட்சியம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி, கிழக்குச் சித்திரை வீதியில் நடைபெற்ற சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் எழுந்தருளினாா்.

இதே போல, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உப கோயில்களான வண்டியூா் மாரியம்மன் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றி, திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

மேலும், மாநகராட்சி பூங்கா முருகன் கோயில், நேதாஜி சாலை பால தண்டாயுதபாணி கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT