மதுரை

உசிலம்பட்டி பகுதியில் மழைக்கு சாய்ந்த நெல்பயிா்கள் விவசாயிகள் வேதனை

DIN

உசிலம்பட்டி பகுதியில் பலத்த மழைக்கு நெல்பயிா்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், வகுரணி, சந்தைப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அறுடைக்குத் தயாராக இருந்த சுமாா் 30 ஏக்கருக்கும் மேல் நெல்பயிா்கள் நிலத்திலேயே சாய்ந்தது. இன்னும் 20 நாள்களில் அறுவடை செய்யவிருந்த நிலையில், பயிா்கள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

இதுகுறித்து விவசாயி சன்னாசி கூறியதாவது:

நெற்பயிா்க்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது மழைக்கு நெல்பயிா்கள் அனைத்தும் சாய்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT