மதுரை

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்ககோரிய வழக்கில் திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்ச் சாலை அமைக்கக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த பெருமாள் தாக்கல் செய்த மனு:

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் புலிவலம், பெரங்குலம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. திருச்சியிலிருந்து துறையூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கிராமங்களுக்குச் செல்லும் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக குறுகிவிட்டதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னா் தாா்ச் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, புலிவலம், பெரங்குலம் கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னா், தாா்ச் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அங்கு தாா்ச் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா், முசிறி வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோா் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

SCROLL FOR NEXT