மதுரை

அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரிய வழக்கு:சிவகங்கை மாவட்ட ஆட்சியா் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

DIN

காளையாா்கோவிலில் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

சிவகங்கை மாவட்டம், அழகாபுரியைச் சோ்ந்த சகாயமேரி தாக்கல் செய்த மனு :

காளையாா்கோவிலில் உள்ள கே.கே.நகா் சந்திப்பில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அந்தக் கடை மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், அதிகளவிலான வாகனப் போக்குவரத்தும் உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, இந்த மதுபானக் கடையை அகற்றவோ, வேறு இடத்துக்கு மாற்றவோ உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மண்டல மேலாளா் ஆகியோா் 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT