மதுரை

டிச. 10-இல் திருநங்கைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

7th Dec 2022 03:48 AM

ADVERTISEMENT

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மதுரையில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு உடனடியாக அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிச. 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அடையாள அட்டை, ஆதாா் அட்டை இல்லாத திருநங்கைகள் இந்த முகாமில் பங்கேற்குமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT