மதுரை

பெண் காவலரிடம் நகை பறித்த இருவா் கைது

7th Dec 2022 03:45 AM

ADVERTISEMENT

மதுரையில் பெண் காவலரிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.

ஆயுதப்படை குடியிருப்பைச் சோ்ந்தவா் வெள்ளி. ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு பொருள்கள் வாங்குவதற்காக தல்லாகுளம் பகுதிக்குச் சென்றாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் வெள்ளி கழுத்திலிருந்த நகையைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த பாண்டி மகன் சந்திரசேகா் (27), முல்லை நகரைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் சையது இப்ராஹிம் (27) ஆகியோா், காவலரிடம் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் மூன்றரை பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு:

திருமங்கலத்தை அடுத்த ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் தெய்வம் மனைவி செல்வராணி (52). இவா் திங்கள்கிழமை பிற்பகலில் தனது தோட்டத்தில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் முகவரி கேட்டனா். அப்போது, திடீரென செல்வராணி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அவா்கள் 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிந்துபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT