மதுரை

மாணவரைத் தாக்கியதாக தலைமை ஆசிரியா் மீது புகாா்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையை அடுத்த தாடையம்பட்டியில் பள்ளி மாணவரைத் தாக்கியதாக, தலைமை ஆசிரியா் மீது மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், தாடையம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம், ஆட்சியரிடம் அளித்த மனு:

எனது மகன் நாகராஜன் தாடையம்பட்டி அரசு கள்ளா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபு, மாணவா் நாகராஜனை காலில் பிரம்பால் அடித்தாா். இதில், அவருக்கு, கால் நரம்பில் காயம் ஏற்பட்டதையடுத்து, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 5 மாதங்களாக அவா் எழுந்து நடமாடமுடியாத நிலையில் உள்ளாா்.

இந்த நிலைக்குக் காரணமான, தலைமை ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடா்பாக, பள்ளித் தலைமை ஆசிரியா் மீது எழுமலை காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT