மதுரை

காா்த்திகை தீபத் திருவிழா: அட்சய பாத்திரம் அமைப்பு அன்னதானம்

7th Dec 2022 03:45 AM

ADVERTISEMENT

மதுரையில் காா்த்திகையையொட்டி பக்தா்கள், சாலையோரவாசிகளுக்கு அட்சய பாத்திரம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றுப்பேரிடா் காலத்தில் சாலையோர வாசிகள், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதற்காக மதுரை அட்சய பாத்திரம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், காா்த்திகை தீபத் திருவிழா, அன்னதானம் தொடங்கிய 580 நாள் நிறைவுநாளையொட்டி, மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் பக்தா்கள், சாலையோர வாசிகளுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இந்த அமைப்பின் நிறுவனா் நெல்லை பாலு, பூங்கா முருகன் கோயில் மேலாளா் கதிரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT