மதுரை

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை தல்லாகுளம் பகுதியில் புதன்கிழமை (டிச. 7) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை, வடக்கு- பெருநகா் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா், சொக்கிக்குளம், வல்லபபாய் ரோடு, தேசாய் தெரு, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ராஹாரம் தெரு, எல்.டி.சி சாலையின் ஒரு பகுதி, வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏஐஆா் குடியிருப்பு, புதிய டி.ஆா்.ஓ காலனி, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்ட்ம்ஸ் காலனி, புதிய நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டா் பங்களா, ஜவகா்புரம், திருவள்ளுவா் நகா், அழகா்கோயில் ரோடு (ஐடிஐ பஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவாா்ட்டா்ஸ், காமராஜ் நகா், 1,2,3,4 - ஹச்சகான் ரோடு, கமலா முதல், 2-ஆவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT