மதுரை

திருமலையில் அண்ணாமலை தீபம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே திருமலையில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட மலைக் கொழுந்தீஸ்வரா் சமேத பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், பஞ்சாமிா்தம், இளநீா், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட வாசனத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, விஷேச தீப தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

அதன்பின், கோயில் முன் மாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியா்கள் பரணி தீபம் ஏற்றினா். தொடா்ந்து, மலை உச்சியில் அண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அண்ணாமலை தீபத்தை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT