மதுரை

பொதுப் பணித் துறை அலுவலா்களைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

DIN

தேவகோட்டையில் பொதுப் பணித் துறை அலுவலா்களைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவகோட்டை அருகே உள்ள மாடக்கோட்டை, ஆணையடி, கிழவன்குடி, புத்தூரணி, சாத்தினான்குடி, சிறுவாச்சி, கோடகுடி, கன்னிகுடி, பூதன்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் வேளாண் தொழிலை மட்டுமே பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த கிராம மக்கள் பாசன வசதி பெறும் வகையில், பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான முத்துநாடு கண்மாய் உள்ளது. காரைக்குடி தேனாற்றிலிருந்து மேற்கண்ட கண்மாய்க்கு தண்ணீா் வரத்து உள்ளது. முத்துநாடு கண்மாய் நிரம்பிய பின் கலுங்கு வழியாக உபரிநீா் வெளியேறி 45 கண்மாய்களுக்கு பாயும்.

இந்த நிலையில், அண்மையில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் ஒரு சிலா் முத்துநாடு கண்மாய் கரையை உடைத்து, தண்ணீரை வேறு கண்மாய்களுக்கு திருப்பிவிட்டனா். இதுகுறித்து அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேற்கண்ட கண்மாய் கரையை அடைக்க வலியுறுத்தி, தேவகோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதைத்தொடா்ந்து, பொதுப் பணித் துறை அலுவலகத்திலும் மனு அளித்தனா். அப்போது, அங்கிருந்த பொதுப் பணித் துறை அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், கண்மாய் கரையை அலுவலா்கள் அடைக்க மறுப்பு தெரிவித்தனா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் திருச்சி - ராமேசுவரம் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பால்துரை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மற்றொரு தரப்பு விவசாயிகள் கண்மாய் கரையை அடைத்தால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோட்டாட்சியா் பால்துரையிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT