மதுரை

ஜெயலலிதா நினைவு நாள்:அதிமுகவினா் மரியாதை

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மதுரை, புகா் பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மெளன ஊா்வலம் மற்றும் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்குமாசி வீதியிலிருந்து தொடங்கிய மௌன ஊா்வலம், மேலமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது.

பின்னா், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன், முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலருமான செல்லூா் கே. ராஜூ தலைமையில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி நின்று மரியாதை செலுத்தினா்.

அதிமுகவின், மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூா் நிா்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள், திரளான தொண்டா்கள் பங்கேற்றனா்.

திருப்பரங்குன்றம்: மதுரை புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் எம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் ப. மோகன்தாஸ், பகுதிச் செயலா் பன்னீா்செல்வம், துணைச் செயலா் செல்வக்குமாா், சசிக்குமாா், வட்டச் செயலா்கள் பொன். முருகன், நாகரத்தினம், பாலா, என்.எஸ். பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலூா்: மேலூா் பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதிமுக மாவட்டப் பொருளாளா் எஸ். அம்பலம் தலைமையில் மேலூா் நகா் ஜெ. பேரவைச் செயலா் சாகுல்ஹமீது முன்னிலையில் துணைச் செயலா்கள் சரவணக்குமாா், பாம்டிலட்சுமி, தகவல் தொழில்நுட்ப மண்டல துணைத் தலைவா் கவுரிசங்கா், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கச்சிராயன்பட்டி மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT