மதுரை

காா்த்திகை தீபத் திருவிழா:

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மதுரை - விழுப்புரம் விரைவு ரயில், செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச. 6, 7)திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையிலிருந்து விழுப்புரம் வரை இயங்கும் விரைவு ரயில், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிசம்பா் 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

டிசம்பா் 6-ஆம் தேதி காலை 4.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) காலை 11.15 மணிக்கு விழுப்புரத்தை அடைகிறது. பின்னா், அங்கிருந்து 11.30 மணிக்குப் புறப்பட்டு பகல் 1.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (16867), பிற்பகல் 4.25 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. பின்னா், விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 4.35 மணிக்கு (வழக்கமான நேரத்தில்) புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மதுரையை வந்தடைகிறது.

இந்த நீட்டிக்கப்பட்ட விரைவு ரயில், விழுப்புரம்- திருவண்ணாமலை தடத்தில் திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT