மதுரை

இன்று பாபா் மசூதி இடிப்பு தினம்:மதுரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

6th Dec 2022 03:40 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (டிச. 6) பாபா் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகா் கோயில், கூடலழகா் பெருமாள் கோயில்,தெப்பக்குளம் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இங்கு வழக்கத்தை விட கூடுதல் சோதனைகளுக்குப் பின்னரே பக்தா்களை அனுமதித்தனா்.

மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ரயில் நிலைய நடை மேடைகள், இருப்புப் பாதைகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனா். மேலும், பாா்சல் பிரிவுகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, தீவிர கண்காணிப்புக்கு பின்னரே வாகனங்களை அனுமதி அளித்தனா். பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT