மதுரை

காமராஜா் பல்கலை.யில் மரக் கன்றுகள் நடும் விழா

6th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக் கழக வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சா்வதேச தன்னாா்வலா்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், தானம் அறக்கட்டளை, ஹெச்.சி.எல். பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள அடவி வனத்தில் இலுப்பை, மயில் கொன்றை, அயல்வாகை, தூங்கு வாகை, ஏளிலம் பாலை, உதியன் மரம், புங்கை, வேங்கை, மந்தாரை, அத்தி, மகாகனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த மரக் கன்றுகள் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படும். பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அடவி வனத்தில் இதுவரை 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியை தானம் அறக்கட்டளை திட்ட மேலாளா் முனிராம் சிங் மற்றும் ஹா்ஸ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT