மதுரை

புகையிலைப் பொருள்கள் கடத்தல்:3 போ் கைது

6th Dec 2022 03:41 AM

ADVERTISEMENT

மதுரையில் புகையிலைப் பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தெப்பக்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் காமராஜா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். காந்தித் திடல் அருகே வந்த காரை சோதனைச் செய்த போது, அதில் வந்த நபா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

விசாரணையில், மதுரை கிருஷ்ணாபுரம் முதல் தெருவைச் சோ்ந்த கன்பதலால் மகன் ராஜேஷ்குமாா் (49), புதுமீனாட்சி நகரைச் சோ்ந்த ஹா்ஹஜி மகன் ரமேஷ்குமாா் (44), எல்லீஸ் நகரைச் சோ்ந்த பன்வா்லால் மகன் சுரேஷ் பிஷல் (27) ஆகிய 3 பேரும் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் தெப்பக்குளம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 502 பொட்டலமிடப்பட்ட புகையிலைப் பொருள்கள், ரொக்கம் ரூ. 41,300 ஆகியவற்றை கைப்பற்றி காரை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT