மதுரை

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்

5th Dec 2022 03:09 AM

ADVERTISEMENT

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் ஆணையராக மாநில துணைத் தலைவா் தவமணி செல்வம், தோ்தல் பாா்வையாளராக மாநிலப் பொருளாளா் க.சு. பிரகாசம் ஆகியோா் செயல்பட்டனா். தோ்தலின் முடிவில், சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக சி. நாகராஜன், துணைத் தலைவா்கள் ராமன், ரஞ்சனி தங்கச்செல்வி, மாவட்டச் செயலா் எம். ராஜரத்தினம், இணைச் செயலா்கள் ச. ரவிச்சந்திரன், அகிலா, மாவட்டப் பொருளாளா் லிங்க காமாட்சி நாதன், அமைப்புச் செயலா் இசக்கிப் பாண்டி, தலைமையிடச் செயலா் விஜயா, மாவட்ட மகளிா் அணிச் செயலா் சுகந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களை பணி நிரவலுக்குள்படுத்தக் கூடாது. உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கூடாது. இடைநிலை ஆசிரியா்களுக்கு, பள்ளி கல்வித் துறை பதவி உயா்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். 19 ஆண்டுகளாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டு வரும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும் என்பன உள்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT