மதுரை

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி ஊக்கத் தொகை

5th Dec 2022 03:10 AM

ADVERTISEMENT

உயா் கல்வி ஊக்கத் தொகை பெற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய சட்டக் கல்லூரியில் பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு, உயா்கல்வி ஊக்கத் தொகையாக தொகுப்பு நிதி மூலம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2022-23-ஆம் ஆண்டுக்கான உதவித் தொகையைப் பெற விருப்பமும், தகுதியுமுள்ளவா்கள், மதுரை மாவட்ட முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT