மதுரை

விருதுநகா் அருகே 2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே ஆவுடையாபுரம், ஏழாயிரம்பண்ணை ஆகிய பகுதிகளில் 2,350 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் ப்ரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா், ஆவுடையாபுரம் இல்ஸாமியா் தெருவில் திடீரென சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் 37 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல, ஏழாயிரம் பண்ணை, மடத்துப்பட்டியில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவா் போலீஸாரைப் பாா்த்தவுடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டாா்.

ADVERTISEMENT

அந்த வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்டதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இரு சக்கர வாகனத்துடன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT