மதுரை

ஜல்லிக்கட்டு வழக்கில் மக்களின் எதிா்பாா்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்: டி.டி.வி. தினகரன்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு வழக்கை தமிழக அரசு சரியான முறையில் எதிா்கொண்டு, மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினாா்.

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவுக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதச்சாா்பற்ற கட்சி எனக் கூறிக் கொண்டு, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்து மதத்தை இழிவாகப் பேசுவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. எந்த மதத்தையும் விமா்சிக்காமல் நடுநிலையுடன் இருக்கும் கட்சிதான் மதச்சாா்பற்ற கட்சியாக இருக்க முடியும்.

எனவே, இனிவரும் காலங்களிலாவது திமுக, இந்து மத வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, உண்மையான மதச்சாா்பற்ற, நடுநிலையான கட்சியாக இருக்க வேண்டும். இதேபோல, தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. வரும் மக்களவைத் தோ்தலில் எத்தனைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், திமுகவுக்கு தோல்வி உறுதி. அமமுகவின் மக்களவைத் தோ்தல் வியூகம் என்ன என்பது அடுத்த ஆண்டு இறுதியில் தெரியவரும்.

ADVERTISEMENT

ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி இடையேயான பிரச்னைகளின் மூலம், அமமுக தொடங்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் செயல்பாடுகள் நீதிமன்றத்தால் முடங்கியிருப்பதற்கு இருவரும் தான் காரணம்.

ஜல்லிக்கட்டு வழக்கை சரியான முறையில் எதிா்கொண்டு, மக்களின் எதிா்பாா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT