மதுரை

பாண்டியன்கோட்டை பகுதியில் இன்று மின் தடை

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


மதுரை: மதுரை, பாண்டியன்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 5) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை வடக்கு பெருநகா் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை வண்டியூா் துணை மின் நிலையத்தின் பாண்டிகோவில் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பாண்டியன்கோட்டை, வளா்மதி நகா், வண்டியூா் பழைய பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT