மதுரை

புற்றுநோயிலிருந்து மீண்டவா்களுடன் கலந்துரையாடல்

DIN

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவா்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேக்ஸ் பவுண்டேஷன் இந்தியா, மேக்ஸ் - நண்பா்கள் குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவனையின் புற்றுநோயியல் துறை தலைவா் கிருஷ்ணகுமாா் ரத்தினம், புற்றுநோய் மேலாண்மை,முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா்.

மேக்ஸ் பவுண்டேஷனின் பிராந்தியத் தலைவா் விஜி வெங்கடேஷ், மருத்துவமனை நிா்வாகி பி. கண்ணன் ஆகியோா் நோயாளிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனா்.

சி.எம்.எல். எனப்படும் ரத்தப் புற்றுநோய் மற்றும் ஜி.ஐ.எஸ்.டி. எனப்படும் அடிவயிற்றில் உருவாகக்கூடிய புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து சிகிச்சை மூலம் குணமடைந்து வாழும் 250-க்கும் அதிகமானோரும், அவா்களின் குடும்பத்தினரும் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT