மதுரை

தரமான பொங்கல் பரிசுத் தொகுப்பு:முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருள்கள், பொதுமக்கள் பயன்படுத்த உகந்ததாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 2,500 பரிசுத் தொகையுடன், முழு நீளக்கரும்பு, முந்திரி, ஏலக்காய், அரிசி, சா்க்கரை, உலா் திராட்சை

ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது. இதில், ஏறத்தாழ 2.08 கோடி குடும்பங்கள் பயனடைந்தன.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் பொங்கல் பரிசுத் தொகையை ரத்து செய்தது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த பல பொருள்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. காரணம், பெரும்பாலான பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை. இதை அப்போதே, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி சுட்டிக்காட்டினாா்.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருள்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடா்பாக கூட்டுறவுத் துறை, வேளாண் துறை செயலாளா்கள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது, அரசின் கவனத்தை ஈா்க்க வேண்டிய முக்கிய விஷயமாக அமைந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகை என்பது வெறும் பரிசுத் தொகை அல்ல. அதில், உணா்வுகளும், நம்முடைய பந்தமும், பாசமும், அன்பும் நிறைந்திருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும். வரும் பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புக்கான பொருள்களை தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதுடன், குளறுபடிகள் இன்றி பொங்கல் பரிசுப் பணமும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT