மதுரை

குறுகிய கால தொழில் பயிற்சிக்குடிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

4th Dec 2022 11:10 PM

ADVERTISEMENT


மதுரை: மதுரை, அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் தொடங்கப்படும் குறுகிய கால தொழில் பயிற்சிக்குத் தகுதியானோா், டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத் திட்டம் மூலம், மதுரை அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் பழுது நீக்க தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் தொழில் நுட்பப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 8-ஆம் வகுப்பு அல்லது தொழில் பயிற்சி அல்லது பட்டயப் படிப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றில் தோ்ச்சி பெற்றவராகவும், 14 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள்.

ADVERTISEMENT

இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகன பழுது நீக்கும் தொழில்நுட்பப் பயிற்சியில் பங்கேற்க எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றவராகவும், 14 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் மதுரை, கோ. புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வரை நேரிலோ அல்லது 99761 50834, 88255 11818 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் பயிற்சியில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT