மதுரை

திருக்குறளை முற்றோதும் மாணவா்கள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

4th Dec 2022 12:56 AM

ADVERTISEMENT

திருக்குறளின் அனைத்துக் குபாக்களையும் ஒப்பிக்கும் திறன் வாய்ந்த மாணவா்கள், தமிழக அரசின் திருக்கு முற்றோதுதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தின்கீழ் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவா்கள் இளம் வயதிலேயே அறிந்து கொள்ளச் செய்யும் வகையில், தமிழக அரசு சாா்பில் திருக்கு முற்றோதுதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தமிழ் வளா்ச்சித் துறை மூலம் தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

அனைத்து நிலையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரும் இத்திட்டத்தில் பரிசு பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வா் அல்லது தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன், தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகம், உலகத் தமிழ்ச் சங்கம், அரசு சட்டக்கல்லூரி அருகில், மதுரை என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமா்ப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT