மதுரை

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

4th Dec 2022 04:53 AM

ADVERTISEMENT

மதுரையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

செல்லூா் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த மதுரை வீரன் மகன் அருண்பாண்டியன் (28). இவா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பொது ஒழுங்குப் பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டாா். எனவே மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அருண்பாண்டியன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்படட்டாா்.

இதேபோன்று, செல்லூா் போஸ் வீதி முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கொப்பரை என்ற பாலசுப்பிரணி (28). இவரும் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பொது ஒழுங்குப் பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டாா். எனவே, மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, கொப்பரை என்ற பாலசுப்பிரமணி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT