மதுரை

தமிழக சிறைகளில் நூலகங்கள் அமைக்கக் கோரி மனு

DIN

தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் நூலகத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு, மாநில உள்துறைச் செயலா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த சகா, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள், 14 மாவட்டச் சிறைகள், 96 கிளைச் சிறைகள்

உள்பட 144 சிறைகள் உள்ளன. பெரும்பாலான சிறைகளில் அதற்கான முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. காற்றோட்டம், வெளிச்சம் இல்லை.

கைதிகளுக்கான விதிகளின்படி, சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும். அது அனைத்துக் கைதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான சிறைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் நூலகத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், நூலகங்கள் பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீா்வாக அமையும். சிறைகளில் நூலகங்கள் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது எனக் குறிப்பிட்டு, மனு தொடா்பாக தமிழக சிறைத் துறை கூடுதல் செயலா், தமிழக உள்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT