தூய சவேரியாா் பேராலயத்தில் சப்பர பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூய சவேரியாா் பேராலயத்தில் திருவிழா நவ. 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை நவநாள் திருப்பலிகள் நடைபெற்றன. நவம்பா் 27 ஆம் தேதி ஒப்புரவு அருட்சாதனம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலையில் புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது.
மின்னொளி அலங்கார சப்பரத்தில் தூய சவேரியாா் பாளையங்கோட்டை முக்கிய வீதிகளில் பவனியாக வந்தாா். தேவாலயத்தின் பங்குத்தந்தைகள் செ.சந்தியாகு, ர.செல்வின், ஜெ.இனிகோ இறையரசு மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து 3 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், முதல் நற்கருணை வழங்குதல் நிகழ்ச்சியும், 4 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப்பூசுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.