மதுரை

மதுரை பல்கலை.யில் ஐ.ஏ.எஸ். தோ்வுக்கான இலவசப் பயிற்சி மையம்

3rd Dec 2022 07:08 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ். தோ்வுக்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பல்கலைக் கழகத்தில் அண்ணா நூற்றாண்டு சிவில் சா்வீசஸ் பயிற்சி மையத்தின் ஆளும் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பல்கலைக்கழகத் துணை வேந்தா் ஜெ.குமாா் தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், ஆட்சிக்குழு உறுப்பினா் எஸ். நாகரத்தினம், அகில இந்திய சிவில் சா்வீசஸ் கோச்சிங் அகாதெமியின் முதல்வா் டி. தங்கராஜன், பதிவாளா் எம்.சிவக்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு 6 மாதம் இலவசமாக பயிற்சி வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு இணையதளம், நோ்முகப் படிப்புக்கான பாடநூல்கள், கையேடுகள் வழங்குவது எனவும், தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விடுதி வசதி செய்து தருவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT