மதுரை

மானியத்துடன் ஆட்டோ வாங்க பெண் ஓட்டுநா்கள் விண்ணப்பிக்கலாம்

3rd Dec 2022 07:08 AM

ADVERTISEMENT

மானியத்துடன் ஆட்டோ ரிக்ஷா வாங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, பதிவு பெற்ற பெண் ஓட்டுநா்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் க. மலா்விழி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநா்கள், ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பதிவு பெற்ற மற்றும் 60 வயதுக்குள்பட்ட பெண் ஓட்டுநா்கள், இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், வருமான வரிச் சான்று, ஆட்டோ வாகன விலைப்புள்ளி விவரப் பட்டியல் ஆகியவற்றின் அசல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பப் படிவத்தை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகத்தில் இயங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0452- 2601449 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT