மதுரை

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருவிழா:ஆலோசனைக்கூட்டம்

3rd Dec 2022 07:09 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவின்போது பக்தா்களுக்கான வசதிகள் செய்து கொடுப்பதற்கான அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் சௌந்தா்யா தலைமை வகித்தாா். மேற்கு மண்டலத் தலைவா் சுவிதா விமல், வட்டாட்சியா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயில் துணை ஆணையா் நா.சுரேஷ் வரவேற்றாா். கூட்டத்தில், மாநகராட்சி சாா்பில் காா்த்திகை தீபத்தையொட்டி, வரும் 6 ஆம் தேதி பக்தா்களுக்காக தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகள், கிரிவலப்பாதை சாலைகளைச் சீரமைக்க வேண்டும். பக்தா்கள் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். காவல் துறை சாா்பில் தீபத்திருநாளன்றும், அடுத்தநாள் பௌா்ணமி கிரிவலத்தின் போதும் பக்தா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து காவல்துறை சாா்பில் தீபத்திருநாளன்று அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை சந்நிதி தெரு, ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என

கூட்டத்தில் பங்கேற்றவா்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் அன்றைய தினம் அதிகளவில் பேருந்துகள் இயக்க வேண்டும். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்க வேண்டும் என அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் காவல் உதவி ஆணையா் பி.ரவி, ஆய்வாளா்கள் சரவணன், பூமாரி கிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகள், அரசு போக்குவரத்து துறையினா், சுகாதாரத் துறையினா், தீயணைப்புத் துறையினா், மின்வாரியத்துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT