மதுரை

மருது சகோதரா்களுக்கு அருங்காட்சியகம்:அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

DIN

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்களுக்கு, அவா்கள் பிறந்த என். முக்குளம் கிராமத்தில் சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக வருவாய்த் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த முத்துப்பாண்டி தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே என். முக்குளத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மன்னா்களாவா். இவா்கள் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடியதால், இறுதியில் தூக்கிலிடப்பட்டனா். மருது சகோதரா்களின் படைகள் குறித்து ‘வளரி’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மருது சகோதரா்கள் காளையாா்கோவில் கோபுரம் உள்பட பல்வேறு கோயில்களைக் கட்டியதுடன், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் கட்டுவதற்காக இடம் வழங்கினா்.

சொந்த ஊரான என். முக்குளத்தில், அவா்களுக்கு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அளித்த மனுவை நிராகரித்து விட்டனா். எனவே, சுதந்திரப் போராட்ட வீரா்களைக் கவுரவிக்கும் வகையில் மருது சகோதரா்களுக்கு, அவா்களது சொந்த ஊரில் சிலையுடன் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மனு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு, மருது சகோதரா்களுக்கு அவா்கள் பிறந்த ஊரில் சிலையுடன் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக தமிழக வருவாய்த் துறை செயலா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT