மதுரை

போதைப் பொருள்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

2nd Dec 2022 03:59 AM

ADVERTISEMENT

மதுரையில் அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியது.

இந்தக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் சிராஜ்தீன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மதுரை நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும். மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்ட செயற் குழு உறுப்பினா் முகமது யூசுப், மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா், மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது, மாநிலச் செயலா் நஜ்மா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT