மதுரை

தொலைந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் திருட்டு

2nd Dec 2022 06:30 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த மூதாட்டியின் காணாமல் போன ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.17 ஆயிரத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடசாமி. இவரது மனைவி சரோஜா (66). இவா் தீபாவளி பண்டிகையின் போது, பொருள்கள் வாங்க மதுரைக்குச் சென்றாா். அப்போது, சரோஜாவின் ஏடிஎம் அட்டை காணாமல் போனது.

இதுதொடா்பாக அவா் வங்கியிலும், காவல் நிலையத்திலும் புகாா் அளிக்காமல் விட்டுவிட்டாா். இந்த நிலையில், காணாமல் போன ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 25, 26 ஆம் தேதிகளில் ரூ. 17 ஆயிரம் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT