மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகைத் திருவிழா கொடியேற்றம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் காா்த்திகைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடியேற்றம் நடைபெறும் கம்பத்தடி மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு கொடிமரத்துக்கு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்று, காலை 10.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதன் பின்னா், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

காா்த்திகை உற்சவம் தொடங்கியதையடுத்து, வருகிற 10-ஆம் தேதி வரை தினசரி காலை, மாலை வேளைகளில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் ஆடி வீதிகளில் புறப்பாடாகிறாா்.

திருக் காா்த்திகை தினமான வருகிற 6-ஆம் தேதி மாலை கோயில் முழுவதும் லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடைத் தெருவில் நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியிலும் எழுந்தருள்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT