மதுரை

தேவகோட்டை அருகே மனைவி கொலை: கணவன் கைது

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மனைவியைக் கொலை செய்த கணவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரவியமங்கலம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகநாதன் மகன் தனபாலன் (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி சினேகவள்ளி (35).

இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், இருவரும் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில், தனபாலன் சினேகவள்ளி வசித்த வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சினேக வள்ளி மண்வெட்டியால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுபற்றி தகவலறிந்து வந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் சினேகவள்ளியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனபாலனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT