மதுரை

தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மறுகால் பாய்ந்த நிலையூா் கண்மாய்

2nd Dec 2022 06:30 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூா் பெரிய கண்மாய் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக தற்போதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இந்தக் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில், கண்மாயில் பாதியளவிற்கு தண்ணீா் இருந்தது.

இந்த நிலையில், தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக மழைநீா், வைகை ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் காரணமாக வியாழக்கிழமை நிலையூா் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து, திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு சென்றது. நிலையூா் கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்மாய் கரை, தண்ணீா் வெளியோறும் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT