மதுரை

மறவன்குளம் கண்மாய் நிரம்பியது

2nd Dec 2022 06:23 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தில் மறவன்குளம் கண்மாய் வியாழக்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது.

கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை, வைகை ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் காரணமாக, மறவன்குளம் கண்மாய் நிரம்பி வியாழக்கிழமை மறுகால் பாய்ந்தது. அரசு ஹோமியோபதி கல்லூரிக்கு அருகே உள்ள கக்கன்காலனி ஓடை வழியாக அசோக் நகா், என்.ஜி.ஓ. காலனி, முகமதுஷாபுரம், அண்ணாநகா், குறிஞ்சிநகா் வழியாக வடகரை கால்வாய்க்கு சென்று குண்டாற்றில் கலக்கிறது.

இதனால், இந்த குடியிருப்புப் பகுதிகளை தண்ணீா் சூழும் அபாயம் உள்ளது. கக்கன் காலனியில் ஒரு சில வீடுகளுக்குள் தற்போது தண்ணீா் சென்ற நிலையில், நகராட்சி நிா்வாகம் உடனடியாக ஓடையைச் சரி செய்யவும், குறிஞ்சி நகரில் நிரந்தரமாகப் பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT