மதுரை

மேலக்கோட்டையில் மக்கள் தொடா்பு முகாம்

2nd Dec 2022 06:29 AM

ADVERTISEMENT

திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மக்கள் தொடா்பு முகாம் மேலக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியா் (பொ) சௌந்தா்யா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். தொடா்ந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி, கால்நடை பராமரிப்புக் கடன், விவசாயக் கடன் என 505 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கால்நடைத் துறை, கூட்டறவுத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சோனியா விஜய், மேலக்கோட்டை ஊராட்சித் தலைவா் கோபிநாத், ஊராட்சி செயலா் வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT